பாலியல் புகார்: எஃப்ஐஆரில் இருந்து நடிகர் நிவின் பாலி பெயர் நீக்கம்
நிவின் பாலிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் போதிய ஆதாரமில்லை என்று கூறி எஃப்ஐஆரிலிருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொச்சி: நிவின் பாலிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் போதிய ஆதாரமில்லை என்று கூறி காவல் துறை பதிந்த எஃப்ஐஆரிலிருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்தார். அதில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்துள்ளார். அவரது புகாரை பதிவு செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர், அதனை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊனுக்கல் (Oonnukal) காவல் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.