போலியான போக்சோ புகார் அளித்த பெண் மீது வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு
கூடா நட்புறவு வெளியே தெரியாமல் இருக்க, மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியவும், சிறுமிக்கு வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் இழப்பீட்டை திரும்பப் பெறவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: கூடா நட்புறவு வெளியே தெரியாமல் இருக்க, மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியவும், சிறுமிக்கு வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் இழப்பீட்டை திரும்பப் பெறவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் ராஜமோகன். இவர் மீது கடந்த 2019-ல் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் போக்சோ வழக்கில் ராஜமோகனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை மதுரை போக்சோ நீதிமன்றம் விசாரித்து, ராஜமோகனுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. தண்டனையை ரத்து செய்யக் கோரி ராஜமோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.