மாநில அரசு விருது பெற்ற கன்னட இயக்குநர் குருபிரசாத் சடலமாக மீட்பு
மாநில அரசின் விருது பெற்ற கன்னட திரைப்பட இயக்குநர் குரு பிரசாத், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு: மாநில அரசின் விருது பெற்ற கன்னட திரைப்பட இயக்குநர் குரு பிரசாத், பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை தட்டிப்பார்த்தும், திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சிதைத்த நிலையில் இருந்த குருபிரசாத் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெங்களூரு எஸ்.பி கூறுகையில், “இயக்குநர் குரு பிரசாத் 5, 6 நாட்களாக முன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார். அதன் பிறகு அவர் வெளியே எங்கும் செல்லவில்லை.