மாய மாயவன்: தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் படம்!
மு தல் இரட்டை வேட படம், மலையாள சினிமாவின் முதல் பேசும்படம் (பாலன்), தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்), ஜேம்ஸ் பாண்ட் வகைப் படங்கள் என பல ‘முதல்’களை அறிமுகப்படுத்திய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் தமிழின் உயர் தரமான ஸ்டன்ட் படத்தையும் தந்திருக்கிறது
மு தல் இரட்டை வேட படம், மலையாள சினிமாவின் முதல் பேசும்படம் (பாலன்), தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்), ஜேம்ஸ் பாண்ட் வகைப் படங்கள் என பல ‘முதல்’களை அறிமுகப்படுத்திய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் தமிழின் உயர் தரமான ஸ்டன்ட் படத்தையும் தந்திருக்கிறது. அந்த படம், ‘மாயா மாயவன்’. அதனால்தான் ‘உன்னத தமிழ் ஸ்டன்ட் படம்!’ என்று இந்தப் படத்தை விளம்பரப்படுத்தி இருந்தனர்.
இதில், டி.கே.சம்பங்கி என்ற நாடக நடிகர் ஹீரோவாக நடித்தார். இவர், தான் சொந்தமாக வைத்திருந்த நாடகக் குழு மூலம் தென்னிந்தியா முழுவதும் நாடகங்கள் நடத்தி வந்தவர். சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் சினிமாவில் முன்னணி இடத்துக்கு வர முடியவில்லை. கதாநாயகியாக நடித்த சுசீலா தேவி, சிறந்த நடனக் கலைஞர். எல்லீஸ் ஆர்.டங்கனின் ‘சதீ லீலாவதி’ உட்பட பல படங்களில் ஆடியுள்ளார்.