‘மேக்கிங் செம்ம... ஸ்க்ரீன் ப்ளே வேஸ்ட்...’ - இப்படிச் சொல்வது சரியா?

பூங்காவில் நான் அமர்ந்திருந்த இருக்கையினருகே இரண்டு பைக்குகளில் அமர்ந்தும், சுற்றி நின்றும் சில 2கே இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காட்சி ஊடகவியல் மாணவர்களென்பது பேச்சில் தெரிந்தது.

‘மேக்கிங் செம்ம... ஸ்க்ரீன் ப்ளே வேஸ்ட்...’ - இப்படிச் சொல்வது சரியா?

பூங்காவில் நான் அமர்ந்திருந்த இருக்கையினருகே இரண்டு பைக்குகளில் அமர்ந்தும், சுற்றி நின்றும் சில 2கே இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காட்சி ஊடகவியல் மாணவர்களென்பது பேச்சில் தெரிந்தது. “அந்தப் படத்துல திரைக்கதை வேஸ்ட் ட்யூட், ஆனா மேக்கிங் நல்லா இருந்தது. இந்தப் படத்துலயும் மேக்கிங் கலக்கிட்டாங்க, ஆனா, திரைக்கதை ரொம்ப தட்டையா இருந்தது”... இவ்வாறு விரிந்தது அவர்கள் பேச்சு. அவர்களிடம் கேட்டேன், “திரையாக்கம் என்று தனியாக ஒன்று இருக்க, இயங்க முடியுமா?” “இருக்குமே அண்ணா”, என்று சொல்லி சில உதாரணங்களைக் கூறினர். அவர்கள் கூறிய அம்சங்கள்.. கண்கவர் காட்சி - அதாவது மிக உயர்ரக கேமராவில் எடுக்கப்பட்ட அழகான ஷாட்டுகள், வண்ண வேலைப்பாடு, கூர்மையான கட்ஸ், உச்சஸ்தாயி பின்னனி இசை, பெரும் பொருட்செலவுடன் கூடிய தயாரிப்பு வடிவம். இதனையே திரையாக்கம் என்பதற்கான அளவுகோலாக அவர்கள் முன்வைத்தனர்.

அவர்களது அரும்பு விடும் கலைக்காதலின் மீது உடனடியாக முரணுரையாடல் நிகழ்த்துவது ஆரோக்கியமானதல்ல என்பதால் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றேன். ஆனால், பொதுவாகவே இத்தகைய கருத்துகளை பரவலாகக் கேட்க முடிகிறது. உண்மையில் கண்கவர் காட்சிகளும், கூர்மையான படத்தொகுப்பும் , உச்சஸ்தாயி பின்னணி இசையும் மட்டுமே ஒரு நல்ல திரையாக்கம் ஆகிவிடுமா?