வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். திருச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். திருச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (அக்.21) ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.