‘விடுதலை 2’ ட்ரெய்லர் எப்படி? - வெற்றிமாறனின் அழுத்தமான காட்சிகள், வசனங்கள்!

வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

‘விடுதலை 2’ ட்ரெய்லர் எப்படி? - வெற்றிமாறனின் அழுத்தமான காட்சிகள், வசனங்கள்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி?: “நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு” என விஜய் சேதுபதியின் வசனத்துடன் தொடங்கிறது ட்ரெய்லர். டார்க்காக தொடங்கும் ட்ரெய்லர் அடுத்து காதலை நோக்கி பயணிக்கிறது. மஞ்சு வாரியர் கிராஃப் வெட்டிக் கொண்டும், ஈர்க்கிறார். அவருக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக இளையராஜாவின் இசை இதம்.

கம்யூனிஸ்ட்டாக கிஷோர், அனுராக் காஷ்யப்பின் சர்ப்ரைஸ் என்ட்ரி, கென் கருணாஸ் தோற்றம் ட்ரெய்லரின் ஹைலைட்ஸ். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம், திராவிட அரசியலின் தெளிப்பு, கம்யூனிஸ்ட் கொடிகளின் அணிவகுப்பு என அழுத்தமான அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளதை காட்சிகள் உணர்த்துகின்றன. முழுக்க முழுக்க விஜய் சேதுபதிக்கான படமாக தெரிந்தாலும், ட்ரெய்லரின் இறுதியில் சூரி என்ட்ரி கொடுக்கிறார். “வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்”, “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” போன்ற வசனங்கள் நச் ரகம்.