“ஷங்கரின் அதே பிரமாண்டம் இந்தப் படத்திலும் இருக்கும்” - ‘கேம் சேஞ்சர்’ குறித்து தில் ராஜு
“ஷங்கரின் அதே பிரமாண்டத்தை இந்தப் படத்திலும் காணலாம்” என ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராகிறார் ஆதித்யாராம்.
சென்னை: “ஷங்கரின் அதே பிரமாண்டத்தை இந்தப் படத்திலும் காணலாம்” என ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராகிறார் ஆதித்யாராம்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு, “21 ஆண்டுகால பயணத்தில் இது எனது 50வது திரைப்படம். மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. என் நண்பர் ஆதித்யாராம் நான்கு திரைப்படங்களை தெலுங்கு மொழியில் தயாரித்துள்ளார், அதன்பிறகு சென்னையில் அவர் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வந்தார். நான் அவரிடம் 'கேம் சேஞ்சர்' என்ற தெலுங்கு படத்தில் பணியாற்றி வருவதாக கூறி, இருவரும் இணைவது குறித்து பரிந்துரைத்தேன்.