110 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கான போட்டித்தேர்வு முடிவை வெளியிட வேண்டும்: ராமதாஸ்
மோட்டார் வாகன ஆய்வாளர் 110 பேரை தேர்வு செய்வதற்காக 6 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போட்டித்தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் 110 பேரை தேர்வு செய்வதற்காக 6 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போட்டித்தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் போக்குவரத்து துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 110 பேரை தேர்ந்தெடுப்பதற்காக 2018-ம் ஆண்டு பிப்.14-ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிக்கையின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு அதே ஆண்டு ஜூன் 10-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.