14 ஆண்டுகளாக அரசுக்கு வாடகை தராத ‘சர்க்கிள் டி பாண்டிச்சேரியை’ வெளியேற்ற நீதிமன்றம் அனுமதி
சர்க்கிள் டி பாண்டிசேரி நிர்வாகம் 14 ஆண்டுகளாக அரசுக்கு வாடகை தராததை அடுத்து அந்த நிர்வாகத்தை பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி: சர்க்கிள் டி பாண்டிசேரி நிர்வாகம் 14 ஆண்டுகளாக அரசுக்கு வாடகை தராததை அடுத்து அந்த நிர்வாகத்தை பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த நிர்வாகத்தை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், 14 ஆண்டுக்கான வாடகை நிலுவையையும் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வடக்குப்புறம் 48,987 சதுரடி பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் சர்க்கிள் டி பாண்டிச்சேரிக்கு தரப்பட்டது. கடந்த 1938-ல் சமூக கலாச்சார முன்னேற்ற ஆலோசனைக்காக இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. புதுச்சேரி சட்டமன்றம் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ள இந்த மையத்தில் மதுபான விற்பனையுடன் கூடிய மனமகிழ் மன்றம் உள்ளது.