“2026 தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்” - அமைச்சர் பொன்முடி பேச்சு

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாகநிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது.

“2026 தேர்தலில் எனக்கே கூட சீட் இல்லாமல் போகலாம்” - அமைச்சர் பொன்முடி பேச்சு

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாகநிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.கௌதமசிகாமணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் .ஜனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்று, பாகநிலை முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி மாநில துணைப்பொதுச் செயலாளரான அமைச்சர் பொன்முடி பேசியது: “விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் தற்போது 4-ல் திமுகவைச் சேர்ந்தவர்கள் எம்எல்ஏ-க்களாக உள்ளனர். வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் 7 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறும் வகையில் கட்சியினர் தேர்தல் பணியாற்றிட வேண்டும். தமிழகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.