22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு: அமரன், மகாராஜா உள்ளிட்ட படங்களுக்கு விருது
சென்னையில் நடைபெற்ற 22-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப் படங்களாக தேர்வான ‘அமரன்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை: சென்னையில் நடைபெற்ற 22-வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப் படங்களாக தேர்வான ‘அமரன்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது விஜய்சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய்பல்லவிக்கும் வழங்கப்பட்டது.
இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இதில் 60 நாடுகளில் இருந்து 180 படங்கள் திரையிடப்பட்டன. திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.