24 மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது: தாய் மறைவு குறித்து கிச்சா சுதீப் உருக்கம்!
“என் அம்மா சுயநினைவில் இருக்கும்போது என்னால் அவரை பார்க்க முடியவில்லை. சில மணிநேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. எல்லாமே!. நான் ஷூட்டிங் செல்வதற்கு முன்பு என் அம்மா என்னை கட்டியணைத்து அனுப்பிவைத்தார்.
பெங்களூரு: “என் அம்மா சுயநினைவில் இருக்கும்போது என்னால் அவரை பார்க்க முடியவில்லை. சில மணிநேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. எல்லாமே!. நான் ஷூட்டிங் செல்வதற்கு முன்பு என் அம்மா என்னை கட்டியணைத்து அனுப்பிவைத்தார். வந்து பார்க்கும்போது அவர் இல்லை.” என நடிகர் கிச்சா சுதீப் தனது தாயின் மறைவு குறித்து உருக்கமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “என் அம்மா பாரபட்சமற்றவர். அன்பு காட்டுபவர், மன்னிக்ககூடியவர், என் வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்தவர். மனித வடிவிலான கடவுள் அவர். அவர் என்னுடைய ஆசிரியர், என் நலம் விரும்பி, என் கொண்டாட்டங்களுக்கானவர், என்னுடைய முதல் ரசிகை. என்னுடைய மோசமான படங்களையும் விரும்பக்கூடியவர். இன்று அவர் அழகான நினைவுகளாக மாறியிருக்கிறார்.