3.50 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு: சென்னை குடிநீர் வாரியம் மும்முரம்

வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத 3 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்களில் அதை உருவாக்குவதற்கான பணிகளில் சென்னைக் குடிநீர் வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

3.50 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு: சென்னை குடிநீர் வாரியம் மும்முரம்

சென்னை: வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத 3 லட்சத்து 50 ஆயிரம் கட்டிடங்களில் அதை உருவாக்குவதற்கான பணிகளில் சென்னைக் குடிநீர் வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

சென்னையில் 1993-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது மழைநீரை சேமிக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசு கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், வணிகக் கட்டிடங்கள், தொழில்துறை கட்டிடங்கள் என அனைத்துக் கட்டிடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், எதிர்பார்த்த பலனில்லாததால், சென்னைப் பெருநகரப் பகுதி நிலத்தடி நீர் ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் தமிழ்நாடு கட்டிடங்கள் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.