7,979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிசம்பர் வரை ஊதியம்: பள்ளிக்கல்வித் துறை அனுமதி

அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 7,979  பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிச.31-ம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

7,979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிசம்பர் வரை ஊதியம்: பள்ளிக்கல்வித் துறை அனுமதி

சென்னை: அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 7,979 பணியிடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிச.31-ம் தேதி வரை ஊதியம் வழங்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ.மதுமதி பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ''அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளுக்கு 1 : 40 என்ற ஆசிரியர்: மாணவர் விகிதப்படி 7,979 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்கு 2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இரு முறை ஊதிய கொடுப்பாணை (செப்.30 வரை) வழங்கப்பட்டது.