அபூர்வ சகோதரர்கள்: வில்லனாக நடிக்க மறுத்த பி.யு.சின்னப்பா!
ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் படங்களை உருவாக்குவது, தமிழ் சினிமா தொடங்கிய காலகட்டங்களிலேயே வழக்கமாகிவிட்டது.
ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் படங்களை உருவாக்குவது, தமிழ் சினிமா தொடங்கிய காலகட்டங்களிலேயே வழக்கமாகிவிட்டது. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், எஸ்.பாலசந்தர் போன்றோர் ஹாலிவுட் படங்களின் பாதிப்பில் பல படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குத் தந்திருக்கிறார்கள். அப்படி ஆச்சார்யா இயக்கத்தில் உருவான படம், ’அபூர்வ சகோதரர்கள்’!
தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த கோவிந்தாச்சாரி ராகவாச்சாரி (டிஜிஆர் என்றும் அழைப்பார்கள்) என்ற ஆச்சார்யா, ஜெமினியின் பிரம்மாண்ட ‘சந்திரலேகா’வின் (1948) கதையை உருவாக்கியவர். அந்தப் படத்தின் புகழ்பெற்ற டிரம்ஸ் டான்ஸ் காட்சிகள் உட்பட சில காட்சிகளை இயக்கியவர் இவர்.