‘அமரன்’ படத்துக்கு முழு வரிவிலக்கு வழங்க செல்வப்பெருந்தகை கோரிக்கை
ராணுவ வீரர்களின் நாட்டுப் பற்றை தத்ரூபமாக எடுத்துக் காட்டியுள்ள அமரன் திரைப்படத்துக்கு முதல்வர் முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: ராணுவ வீரர்களின் நாட்டுப் பற்றை தத்ரூபமாக எடுத்துக் காட்டியுள்ள அமரன் திரைப்படத்துக்கு முதல்வர் முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயனை மிகச் சிறப்பாக நடிக்க வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ திரைப்படத்தை பார்க்கிற அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.