அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தமிழகத்தில் உள்ள ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்படுவதாக கடந்த 18-ம் தேதி அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.