அரியலூர் அருகே விடுதி உணவில் பல்லி - 5 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
செந்துறை அருகே விடுதி சாப்பாட்டில் பல்லி இருந்ததால், காலை உணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அரியலூர்: செந்துறை அருகே விடுதி சாப்பாட்டில் பல்லி இருந்ததால், காலை உணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவிகளுக்கு விடுதி உள்ளது. இந்த விடுதியில் பிளஸ் 1 பயிலும் மாணவிகள் 3 பேர், பிளஸ் 2 பயிலும் மாணவிகள் 3 பேர் என 6 பேர் தங்கியுள்ளனர்.