ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு குற்றப் பின்னணியை ஏன் விசாரிக்கக் கூடாது? - ஐகோர்ட் கேள்வி
வழக்கறிஞர்கள், காவல்துறையினர் போல ஆசிரியர்களுக்கும் அவர்களின் பணி நியமனத்துக்கு முன்பாக அவர்களது குற்றப் பின்னணி குறித்து ஏன் விசாரிக்கக் கூடாது என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: வழக்கறிஞர்கள், காவல் துறையினர் போல ஆசிரியர்களுக்கும் அவர்களின் பணி நியமனத்துக்கு முன்பாக அவர்களது குற்றப் பின்னணி குறித்து ஏன் விசாரிக்கக் கூடாது என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதன்பிறகு நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.