ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்கும் வகையில், தடையின்மை சான்று வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒற்றைச் சாளர திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் உத்தேச தடையின்மை சான்று வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

சென்னை: ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்கும் வகையில், தடையின்மை சான்று வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒற்றைச் சாளர திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் உத்தேச தடையின்மை சான்று வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா வெளியட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வணிகத்தை எளிதாக மேற்கொள்ளும் வகையிலும், தமிழக அரசால் ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு துறைகளிடம் இருந்து தடையின்மை சான்று வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யும் வகையில், ஒற்றைச் சாளர திட்டத்தில் தடையின்மை சான்று வழங்கும் துறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் உத்தேச தடையின்மை சான்று வழங்குதல் என இருவகையாக செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த நடவடிக்கையின் முதல்படியாக 19 துறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, உத்தேச தடையின்மை சான்று வழங்கும் வகையில், ஒவ்வொரு துறைக்கும் அதிகபட்ச காலவரையறை வகுக்கப்பட்டுள்ளது.