ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

வெளியூரில் தங்கியுள்ள மக்கள்தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக வழக்கம்போல அரசு சார்பில் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 4,900 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

சென்னை: வெளியூரில் தங்கியுள்ள மக்கள்தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக வழக்கம்போல அரசு சார்பில் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 4,900 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

எனினும், சொகுசு வசதிகள் காரணமாக சிலர் தனியார் பேருந்துகளை நாடுகின்றனர். குறிப்பாக விரைவு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த இருக்கை,படுக்கை வசதி கொண்ட பேருந்துகளின் முன்பதிவு நிறைவடைந்த நிலையில், வெகுதூரம் பயணிக்கவேண்டியவர்கள் வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளில் பயணிக்கஆயத்தமாகின்றனர். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.