‘இந்து தமிழ் திசை’ திருச்சி பதிப்பு தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50.
திருச்சி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50.
மயிலாடுதுறையை பூர்விகமாகக் கொண்ட சதாசிவம் - ஜெயலட்சுமி தம்பதியினரின் இளைய மகன் கல்யாணசுந்தரம். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் 2000-ம் ஆண்டில் தினமணி மதுரை பதிப்பில் மயிலாடுதுறை வட்டார நிருபராக பணியில் சேர்ந்தார். சிறப்பாக செய்தி அளிக்கும் விதத்தைக் கண்ட அப்போதைய தினமணி ஆசிரியர் ராம. திரு சம்பந்தம், இவரை திருவாரூர் மாவட்ட நிருபராக பணி நியமனம் செய்தார்.