உணவுப் பொருள் கடத்தல் | 9000 வழக்குகள் பதிவு; 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல் - உணவுத் துறை செயலர் தகவல்

மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், தமிழகம் முழுவதும் உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 9 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

உணவுப் பொருள் கடத்தல் | 9000 வழக்குகள் பதிவு; 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல் - உணவுத் துறை செயலர் தகவல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், தமிழகம் முழுவதும் உணவுப் பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 9 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 28,802 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் தெருவில் உள்ள நியாய விலைக் கடை மற்றும் ஐந்து ரதம் செல்லும் பகுதியான அண்ணா நகரில் அமைந்துள்ள நியாய விலைக் கடைகளில், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணியாளர்களிடம் கடையில் இருப்பு உள்ள பொருட்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கடையில் உள்ள பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் முறையாக பொருட்களை வழங்கப்பட்டுள்ளதா என பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்தார்.