ஒரே நேரத்தில் 555 பேருக்கு வர்ம சிகிச்சை அளித்து தேசிய சித்த மருத்துவமனை கின்னஸ் சாதனை
ஒரே நேரத்தில் 555 வர்ம சிகிச்சை நிபுணர்களை கொண்டு 555 பேருக்கு வர்ம சிகிச்சை அளித்து தேசிய சித்த மருத்துவமனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
சென்னை: ஒரே நேரத்தில் 555 வர்ம சிகிச்சை நிபுணர்களை கொண்டு 555 பேருக்கு வர்ம சிகிச்சை அளித்து தேசிய சித்த மருத்துவமனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சித்த மருத்துவத்தின் வர்மமருத்துவ சிறப்புகளை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (மருத்துவமனை) பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன்படி, நேற்று மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 555 வர்மானிகளை (வர்ம சிகிச்சை நிபுணர்கள்) கொண்டு 555 பேருக்கு தற்காப்பு வர்ம மருத்துவப் பரிகாரத்தை வழங்கி சாதனை படைத்துள்ளது. கின்னஸ் நிறுவன பிரதிநிதி ரிச்சர்ட் வில்லியம், கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கினார்.