ஓபிஎஸ், குடும்ப உறுப்பினர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிகாலத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.