கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்து ஈடுபட வேண்டும்: ஜி.கே. வாசன்

கனமழைக்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்து ஈடுபட வேண்டும்: ஜி.கே. வாசன்

சென்னை: கனமழைக்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: கடலோரப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பு தெரிவிக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழையோ கனமழையோ பெய்ய வாய்ப்புண்டு.