குன்னூரில் கனமழை: தடுப்புச் சுவர்கள் இடிந்து அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

குன்னூரில் தொடர் கனமழை காரணமாக, வீட்டின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. 

குன்னூரில் கனமழை: தடுப்புச் சுவர்கள் இடிந்து அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

குன்னூர்: குன்னூரில் தொடர் கனமழை காரணமாக, வீட்டின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சுமார் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, மரப்பாலம், காட்டேரி பூங்கா, கரும்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்தன. அவற்றை வருவாய் துறையினர் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனிடையே குன்னூர் ஆப்பில் பீ அருகே உள்ள ஜாய்ஸ் பில்டிங் பகுதியில் வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது.