குப்பை வாகனங்களில் செல்லும் தூய்மை பணியாளர்கள்!

சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதில் தினந்தோறும் 6 ஆயிரத்து 150 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் மாநகராட்சி மற்றும் தனியார் என மொத்தம் 18 ஆயிரத்து 845 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குப்பை வாகனங்களில் செல்லும் தூய்மை பணியாளர்கள்!

சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதில் தினந்தோறும் 6 ஆயிரத்து 150 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் மாநகராட்சி மற்றும் தனியார் என மொத்தம் 18 ஆயிரத்து 845 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறது. மற்ற 10 மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

பெரும்பாலான மண்டலங்களில் தற்போது, பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலமாக வீடு வீடாக சென்றுகுப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மாநகராட்சிக்காக தூய்மைப் பணியில் ஈடுபடும் அர்பேசர் ஸ்மித் போன்ற நிறுவனங்கள் பேட்டரி வாகனங்களை முறையாக பராமரிக்கின்றன. பேட்டரி வாகனங்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்படுவதில்லை. அதனால் அர்பேசர் ஸ்மித் சார்பில் பேட்டரி வாகனங்களை இயக்குவோர் மற்றும் உதவியாளருக்கு அந்நிறுவனமே விபத்து காப்பீடு செய்து கொடுக்கிறது.