குமரியில் டிச.31, ஜன.1-ல் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள  திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிச. 31 மற்றும் ஜன. 1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழக அரசு சார்பில்  25வது ஆண்டு நிறைவுப் பெருவிழாவை கொண்டாட இருப்பதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிவித்துள்ளார். 

குமரியில் டிச.31, ஜன.1-ல் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிச. 31 மற்றும் ஜன.1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழக அரசு சார்பில் 25-வது ஆண்டு நிறைவுப் பெருவிழாவை கொண்டாட இருப்பதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோப் பதிவில் பேசியிருப்பதாவது: வடக்கே உள்ள வானுயர்ந்த இமயமலைக்கு நிகராக தெற்கே குமரிமுனையில் தமிழ்மலையாக வள்ளுவர் சிலையை உருவாக்கினார் மறைந்த முதல்வர் கருணாநிதி. கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 133 அடியில் வானுயர் புகழுக்குச் சாட்சியமாக சிலை அமைத்தார். அந்தச் சிலை அமைக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. வெள்ளிவிழா காண்கிறது வள்ளுவனார் சிலை.