கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் தண்டவாளம் விரிசலால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி
கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் அனுப்பம்பட்டு - மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல், மீஞ்சூரில் சிக்னல் கோளாறு ஆகியவை காரணமாக, மின்சார ரயில் சேவை இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
சென்னை: கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் அனுப்பம்பட்டு - மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல், மீஞ்சூரில் சிக்னல் கோளாறு ஆகியவை காரணமாக, மின்சார ரயில் சேவை இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கத்தில் முக்கியமான வழித்தடமாக, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் தடம் உள்ளது. இத்தடத்தில் நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் வழங்கப்படுன்றன. தினமும் இந்த ரயில்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அனுப்பம்பட்டு - மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பாளர் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சோதனை மேற்கொண்டார்.