‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை
இந்தாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் அவருக்கு விருது வழங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இந்தாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் அவருக்கு விருது வழங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. மறைந்த கர்நாடக இசை பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த சிவில் வழக்கில், “கடந்த 2004-ம் ஆண்டு எனது பாட்டியின் மறைவுக்குப்பிறகு மியூசிக் அகாடமி அவரது நினைவைப் போற்றி கவுரவிக்கும் வகையில் அவருடைய பெயரில் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி’ என்ற விருதை ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து வழங்கி வருகிறது.
அதன்படி மியூசிக் அகாடமியின் வருடாந்திர இசை கச்சேரிக்கான சீசனின்போது ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசை உலகுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் பாடகர்களுக்கு ‘சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலெட்சுமி’ விருது வழங்கப்படுகிறது. அதன்படி வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள மியூசிக் அகாடமியின் 98-வது ஆண்டு விழாவில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எனது பாட்டி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.