சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை கடந்ததால், அணையில் இருந்து நீர் மின் நிலையம் வழியாக இன்று (அக்.25) முதல் விநாடிக்கு 750 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நீப்பத்துறையில் இருந்து சாத்தனூர் அணை வரை தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை கடந்ததால், அணையில் இருந்து நீர் மின் நிலையம் வழியாக இன்று (அக்.25) முதல் விநாடிக்கு 750 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நீப்பத்துறையில் இருந்து சாத்தனூர் அணை வரை தென்பெண்ணையாறு கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் வேகமாக நிரம்பி வருகிறது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கடந்த 13-ம் தேதி 96 அடியாக இருந்தது.