“சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம்” - கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தல்
சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம் என்றும், அனைவருக்கும் கண்ணியத்துடன் பதிலளிக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம் என்றும், அனைவருக்கும் கண்ணியத்துடன் பதிலளிக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியின் வி சாலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில், சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் அதன் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாகிரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.