சென்னை ஐசிஎஃப்-க்கு தேசிய எரிசக்தி சேமிப்பு விருது
தேசிய எரிசக்தி சேமிப்பு தின நிகழ்ச்சி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் முன்னிலை வகித்தார்.
சென்னை: வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் சிறப்பு அம்சமாக மின் சிக்கனத்தை உருவாக்கியதற்காக, தேசிய எரிசக்தி சேமிப்பு விருது சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய எரிசக்தி சேமிப்பு தின நிகழ்ச்சி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வந்தே பாரத் ரயில் தயாரிப்பின் சிறப்பு அம்சமாக மின் சிக்கனத்தை உருவாக்கியதற்காக, தேசிய எரிசக்தி சேமிப்பு விருது சென்னை ஐசிஎஃப்-க்கு வழங்கப்பட்டுள்ளது.