சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் ரயில் சேவை
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் இன்று (அக்.29) முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்குகிறது. 14 மாதங்களுக்கு பிறகு ரயில்சேவை தொடங்குவதால், பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் இன்று (அக்.29) முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்குகிறது. 14 மாதங்களுக்கு பிறகு ரயில்சேவை தொடங்குவதால், பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். தினசரி இருமார்க்கமாகவும் தலா 45 சேவைகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.274.20 கோடியில் புதிய பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது.