சென்னைக்கான ஏசி மின்சார ரயில் - அடுத்த நிதியாண்டு தயாரிப்பு பணி தொடக்கம்

மும்பை ரயில்வேக்கு ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்கப் படுவதால், சென்னைக்கு ஏசிபுறநகர் மின்சார ரயில் தயாரிக்கும் பணியை அடுத்த நிதியாண்டில் (2025-26) தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐ.சி.எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்

சென்னைக்கான ஏசி மின்சார ரயில் - அடுத்த நிதியாண்டு தயாரிப்பு பணி தொடக்கம்

சென்னை: மும்பை ரயில்வேக்கு ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்கப்படுவதால், சென்னைக்கு ஏசிபுறநகர் மின்சார ரயில் தயாரிக்கும் பணியை அடுத்த நிதியாண்டில் (2025-26) தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐ.சி.எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகப்புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப் திகழ்கிறது. இங்கு பல்வேறு வகைகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இங்கு வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இது தவிர, எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில் பெட்டிகள் உட்பட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.