சென்னையில் 6 விமானங்கள் ரத்து
சென்னையில் கனமழை எச்சரிக்கை, பயணிகள் குறைவாக இருந்ததால் 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை, போதிய பயணிகள் இல்லாதது போன்ற காரணங்களால் நேற்றுமுன்தினம் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
சென்னை: சென்னையில் கனமழை எச்சரிக்கை, பயணிகள் குறைவாக இருந்ததால் 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை, போதிய பயணிகள் இல்லாதது போன்ற காரணங்களால் நேற்று முன்தினம் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
2-வது நாளாக நேற்று சென்னையிலிருந்து காலை 6:55 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10:35 மணிக்கு சேலம் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2:40 மணிக்கு சீரடி செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை ரத்தாகின.