செல்லூர் கண்மாய் முதல் வைகை ஆறு வரை ரூ.15 கோடியில் காங்கிரீட் கால்வாய் பணி தொடக்கம்
மதுரை மழை வெள்ளத்திற்கு தீர்வு காணும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மதுரை செல்லூர் கண்மாய் உபரிநீர் வெளியேறும் கால்வாயில் ரூ.15 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் மூடி கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது
மதுரை: மதுரை மழை வெள்ளத்துக்கு தீர்வு காணும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மதுரை செல்லூர் கண்மாய் உபரிநீர் வெளியேறும் கால்வாயில் ரூ.15 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் மூடி கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.
மதுரை செல்லூர் கண்மாய், மாநகராட்சிப் பகுதியில் உள்ள முக்கிய நீர் ஆதாரமாமனது. மிகவும் பழமையான இக்கண்மாய் வைகை ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதி 29.225 சதுர கி.மீ. உள்ளது. இக்கண்மாயின் பாசனப்பரப்பு 72.73 ஹெக்டெர் நிலங்கள் முழுமையாக மாநகர் குடியிருப்புகளாக மாறிவிட்டன. ஆனால், கண்மாய் மழைநீர், தேக்கப்பட்டு அது நிரம்பும் பட்சத்தில் வைகை ஆறுக்கு செல்கிறது. கண்மாயின் மொத்த கொள்ளளவு 16.490 மி.க.அடி. ஆகும். இக்கண்மாயின் உபரிநீர் 2600 மீட்டர் நீளம் கொண்ட பந்தல்குடி கால்வாய் மூலம் வைகை ஆற்றினை சென்றடைகிறது.