ஜவ்வாதுமலையில் தொடர் மழை: 3 அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
ஜவ்வாதுமலையில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக மலையடிவாரத்தில் உள்ள குப்பநத்தம், மிருகண்டா நதி மற்றும் செண்பகத் தோப்பு ஆகிய 3 அணைகளில் இருந்து இன்று (அக்டோபர் 15-ம் தேதி) உபரிநீர் வெளியேற்றப்படுகிறது
திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக மலையடிவாரத்தில் உள்ள குப்பநத்தம், மிருகண்டா நதி மற்றும் செண்பகத் தோப்பு ஆகிய 3 அணைகளில் இருந்து இன்று (அக்டோபர் 15-ம் தேதி) உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஜவ்வாதுமலையில் பெய்து வரும் தொடர் மழையால், மலையடிவாரத்தில் உள்ள குப்பநத்தம், செண்பகத் தோப்பு மற்றும் மிருகண்டா நதி ஆகிய 3 அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 3 அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் எதிரொலியாக செய்யாறு, கமண்டல நாக நதி மற்றும் தென்பெண்ணை ஆற்றை ஒட்டி கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.