டான்டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

டான்டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

டான்டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: டான்டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு ரூ.5.72 கோடி செலவில் இந்த, 20% போனஸ் வழங்கப்படும். இதனால் 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது (TANTEA) 1976-ம் ஆண்டு நிறுவப்பட்டது.