தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: இருவரும் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து  வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் நவ. 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: இருவரும் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் நவ. 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவ.18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே, கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக சமூகவலைதளத்தில் அறிவித்தனர்.