தமிழக அரசின் மலையேற்ற பயிற்சிக்கு தடைகோரி வழக்கு

தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரக் தமிழ்நாடு என்ற மலையேற்ற நடைபயிற்சி திட்டத்தை கைவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

தமிழக அரசின் மலையேற்ற பயிற்சிக்கு தடைகோரி வழக்கு

சென்னை: தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரக் தமிழ்நாடு என்ற மலையேற்ற நடைபயிற்சி திட்டத்தை கைவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 40 மலையேற்ற நடைபயிற்சி திட்டத்தை தமிழக அரசுஅறிமுகம் செய்துள்ளது. இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற நடைபயிற்சியை அனுமதிப்பது என்பது வனங்களில் உள்ள விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.