தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

மதுரை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 9 ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நான்கு மோட்டார் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், 61 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.