தமிழக மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட  தமிழக  விசைப்படகு மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தமிழக மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த அக். 26-ல் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சிலம்புச்செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குணா, செஞ்சிவேல், வெங்கடேசன், சின்ன அப்பு, கார்த்தி, ரகு உள்ளிட்ட 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்கள் அனைவரையும் சிறைபிடித்தது.