“தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி” - மருத்துவர் மீதான தாக்குதலுக்கு விஜய் கண்டனம் 

அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது, என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். 

“தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி” - மருத்துவர் மீதான தாக்குதலுக்கு விஜய் கண்டனம் 

சென்னை: “அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது. தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “தமிழகத்தில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் - ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.