தீபாவளி: தி.நகர் உள்ளிட்ட வணிக வீதிகளில் கண்காணிப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க நேற்று தி.நகர் உட்பட வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

தீபாவளி: தி.நகர் உள்ளிட்ட வணிக வீதிகளில் கண்காணிப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க நேற்று தி.நகர் உட்பட வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சென்னையில் இன்று 18 ஆயிரம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் புத்தாடை, நகை, பட்டாசு வாங்க வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் குவிந்தனர். குறிப்பாக தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு வணிக வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.