துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கு திரையரங்குகள் அதிகரிப்பு
மக்களிடையே வரவேற்பு அதிகரித்து இருப்பதால் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை: மக்களிடையே வரவேற்பு மிகுந்துள்ளதால் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. தெலுங்கில் உருவாக்கப்பட்ட இப்படம் இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை தமிழகத்தில் ராக்போர்ட் நிறுவனம் வெளியிட்டது. தமிழகத்திலும் PAID PREMIERE முறையில் ‘லக்கி பாஸ்கர்’ சுமார் 50-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிட்டார்கள்.