தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகப் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக தடுப்பு சுவர் சிதைந்துள்ள நிலையில், துறைமுகப் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில்: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக தடுப்பு சுவர் சிதைந்துள்ள நிலையில், துறைமுகப் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரை அருகே முள்ளூர்துறை, ராமன்துறை, புத்தன்துறை, இனயம்புத்தன்துறை, இனயம் சின்னத்துறை, ஹெலன்நகர், மிடாலம் போன்ற கிராமங்களும், மறுபகுதியில் இரவிபுத்தன் துறை, தூத்தூர், வள்ள விளை ஆகிய கடற்கரை கிராமங்களும் அமைந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடலில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் ராட்சச அலைகள் எழும் போதும் கடற்கரை கிராமங்கள் இருக்கக்கூடிய வீடுகளை இழுத்துச் செல்வதும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதும் வழக்கமாக நிகழ்ந்து வந்தது.