தொடர் அசம்பாவிதங்கள்; ரயில் தண்டவாளங்களை ஒட்டி ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டம்

கவரைப்பேட்டை ரயில் விபத்தை தொடர்ந்து, தமிழகத்தில் ரயில் தண்டவாளங்களை ஒட்டி போலீஸாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தொடர் அசம்பாவிதங்கள்; ரயில் தண்டவாளங்களை ஒட்டி ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டம்

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்தை தொடர்ந்து, தமிழகத்தில் ரயில் தண்டவாளங்களை ஒட்டி போலீஸாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு 8.30 மணி அளவில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் பிரதான பாதைக்கு பதிலாக லூப் லைன் எனப்படும், கிளை பாதையில் மாறி, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டன. 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.